தஞ்சம் கோரும் ஆப்கான் ஊடகவியலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டுதல்
2021 செப்டம்பர் ௦6 கௌரவ டலஸ் அழகப்பெரும மாண்புமிகு வெகுசன ஊடக அமைச்சர், இல. 163, அசிதிசி மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05. கௌரவ (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ் மாண்புமிகு வெளிநாட்டு அமைச்சர், வெளிநாட்டு அமைச்சு குடியரசுக் கட்டிடம் சேர் பாரொன் ஜயதிலக்க மாவத்தை கொழும்பு 01 இலங்கை கௌரவ அமைச்சர் அவர்களுக்கு, தஞ்சம் கோரும் ஆப்கான் ஊடகவியலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டுதல். இலங்கையில் உள்ள ஊடக அமைப்புகளின் கூட்டமைப்பு என்ற வகையில், இந்த இக்கட்டான தருணத்தில்…
எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்வோர்களை சட்டவிரோதமான முறையில் கைது செய்வதானது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை மீறும் நடவடிக்கையாகும்
08.06 ஊடக அறிக்கை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்வோர்களை சட்டவிரோதமான முறையில் கைது செய்வதானது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை மீறும் நடவடிக்கையாகும் – சுதந்திர ஊடக இயக்கம். பொதுமக்களை பாதிக்கும் பொதுப் பிரச்சனைகள் மற்றும் தமது தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் போன்றவர்களை கைது செய்யும் நோக்கில் காவல்துறையினர் மேற்கொள்ளும் சட்டத்திற்கு முரணான நடவடிக்கைகளை…
நிர்வாக சேவையின் சமில ஜயசிங்க கைது செய்யப்பட்டதானது பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் ஒரு புதிய வடிவமாகும்.
முகப்புத்தகத்தில் ஒரு பதிவை பகிர்ந்தது குறித்து விசாரிப்பதற்காக குற்றவியல் புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்ட இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த சமில இந்திக ஜயசிங்க கைது செய்யப்பட்ட சம்பவத்தை பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கு ஒரு புதிய அச்சுறுத்தலாக சுதந்திர ஊடக இயக்கம் காண்கிறது. பாதிக்கப்பட்ட சமில ஜயசிங்க, அவரது கைது தன்னிச்சையானது மற்றும் பலவந்தமானது என்றும் அவரது முகப்புத்தக கணக்கில் பகிரப்பட்ட ஒரு…
சுகாதாரத் துறைகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்குச் சுகாதார செயலாளரினால் வெளியிடப்பட்ட முன்னெச்சரிக்கை கடிதமானது தொற்றுநோய் தொடர்பான உண்மை தகவல்களை மறைக்கும் முயற்சியாகும்.
வெகுசன ஊடகங்களின் செய்தி வெளியிடுதல் தொடர்பில் அரச அதிகாரிகளுக்கு தாக்கத்தை விளைவிக்கும் ஸ்தாபன விதிக் கோவைகளை மேற்கோள்காட்டி, அவற்றை புறக்கணிக்கும் அனைத்து அதிகாரிகளுக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரியப்படுத்தும் சுகாதாரத் துறை செயலாளரினால் ஒப்பமிட்ட அச்சுறுத்தல் கடிதம் சகல சுகாதாரத் துறைகள் நிறுவனங்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். கொவிட்-19 தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் பொதுமக்கள் வெவ்வேறு மூலாதாரங்களின் அடிப்படையில் தொற்று சம்பந்தமான உண்மை தகவல்களை பெற்றுக்கொள்வதற்காகக் காணப்படும் வாய்ப்புக்களை மட்டுப்படுத்தி தகவல் உரிமையை மீறும் குறித்த செயற்பாட்டை சுதந்திர ஊடக…
இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலால் செய்தி நிறுவனங்கள் அமைந்துள்ள கட்டிடம் தகர்க்கப்பட்டமை மற்றும் பொதுமக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை சர்வதேச சமூகம் கடுமையாக கண்டிக்க வேண்டும்.
ஊடக அமைப்புகளின் கூட்டமைப்பு இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் காஸாவில் அமைந்துள்ள சர்வதேச ஊடக அலுவலகங்கள் சேதமாகியுள்ளதுடன் ஊடக சுதந்திரம் மற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் பாரிய அச்சுறுத்தல் நிலவுகின்றமை அவதானிக்கத்தக்கதாகும். சர்வதேச ஊடக நிறுவனங்களின் செய்தி அறிக்கைக்கு அமைய மே 13 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில், உள்நாட்டு ஊடக நிறுவனங்கள்,அல்ஜசீரா மற்றும் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு காஸாவில் இயங்கி…
சுயாதீன ஊடகவியலாளரான மலிக அபேகோன்னை உடனடியாக விடுவிப்பதுடன் , அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்
சுயாதீன ஊடகவியலாளரும் புகைப்படக் கலைஞருமான மலிக அபேகோன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டமையானது காவல்துறையினரின் மனித நேயமற்ற ,வெறுக்கத்தக்க செயல் என்பதுடன் குறித்த செயலை சுதந்திர ஊடக இயக்கம் கடுமையாக கண்டிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும் . ஏப்ரல் 07 அன்று கொழும்பில்,ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு போராட்டத்தின்போது மலிக அபேகோன் மருதானை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதுடன் காவல் நிலையத்தில் வைத்து…
ஊடகவியலாளர் ஒருவர் கடத்தப்பட்டமை குறித்து உடனடியாக நாட்டு மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்
சுயாதீன ஊடகவியலாளரான சுஜீவ கமகே கடத்தப்பட்டதுடன் சித்திரவதை செய்யப்பட்டும் பின்னர் விடுவிக்கப்பட்டவையானது ஊடகவியலாளர்களின் பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் விடுக்கும் சம்பவமாக சுதந்திர ஊடக இயக்கம் கருதுவதுடன், இது தொடர்பில் அரசாங்கம் உடனடி விசாரணை நடத்தி நாட்டு மக்களுக்கு உண்மை தகவலை வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சுதந்திர ஊடக இயக்கம் அரசிடம் கேட்டுக்கொள்கின்றது. சுஜீவ கமகே கூறிய விடயங்கள் மற்றும் அறிக்கையிடப்பட்டுள்ள மைக்கு அமைய …
கருத்து சுதந்திர உரிமையை பாதிக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் தவிர்த்துகொள்ள வேண்டும்
சிங்கராஜ வனப்பகுதிக்கு அருகாமையில் இடம்பெறும் காடழிப்பு தொடர்பில் இறக்குவான பகுதிய சேர்ந்த பாக்யா அபேரத்ன எனும் இளவயது யுவதி தெரிவித்திருந்த கருத்துக்கு எதிராக செயல்படும் அரசாங்க அதிகாரிகள் மற்றும் காவல்துறையினறின் நடவடிக்கையானது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்நடவடிக்கையானது கருத்துரிமையை மீறும் நடவடிக்கையாக சுதந்திர ஊடக இயக்கம் கருதுவதுடன் தமது கண்டனத்தையும் தெரிவித்துகொள்கின்றது. சிரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “லக்சபதி” நிகழ்ச்சியில் பங்கேற்ற பாக்யா அபேரத்ன …
1973 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க இலங்கை பத்திரிகை பேரவை சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும்!
இச்சட்ட மறுசீரமைப்பிற்கு சுதந்திர ஊடக இயக்கம் தமது கடுமையாக எதிர்ப்பை தெரவித்துகொள்கின்றது ! ஏறக்குறைய 50 ஆண்டுகள் பழமையான, மற்றும் ஊடக சுதந்திரத்திற்கு தீங்கு விளைவிக்க கூடிய, சட்டத்தினால் பாதுகாப்பு கவசமும் பெற்ற காலத்தினால் காலாவதியுமான இலங்கை பத்திரிகை பேரவை சட்ட, மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பை தெரிவித்தும் அச்சட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை விடுத்தும், சுதந்திர ஊடக இயக்கமானது வெகுசன ஊடக அமைச்சின்…
சமூக ஊடகங்களில் கருத்து சுதந்திரத்திற்கான உரிமைக்கான தடைகளை உடைக்க வேண்டும்!
சமூக ஊடகங்களில் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை கண்மூடித்தனமான முறையில் தடைசெய்யும் போக்கு குறித்து சுதந்திர ஊடக இயக்கம் கடும் கவலையை வெளிப்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றுநோய் தொடர்பாக சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தியோர் கைதுசெய்யப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் குறிப்பிட்ட விடயம் தொடர்பாக மேலும் கைதுகள் இடம்பெறும் என்றும் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. கடந்த 2020 நவம்பர் மாதத்தில், வடக்கு மற்றும் கிழக்கில் சமூக ஊடகங்களில்…