எழுத்தாளர் சக்திக சத்குமார வழக்கு தீர்ப்பை முன்னுதாரணமாக கொண்டு,காவல் துறையால் மேற்கொள்ளப்படும் நியாய மற்ற கைது நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என சுதந்திர ஊடக இயக்கம் வேண்டிக்கொள்கின்றது.
2021.02.11
பொலிஸ் மா அதிபர்,
பொலிஸ் தலைமையகம்,
கொழும்பு
எழுத்தாளர் சக்திக சத்குமார வழக்கு தீர்ப்பை முன்னுதாரணமாக கொண்டு,காவல் துறையால் மேற்கொள்ளப்படும் நியாய மற்ற கைது நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என சுதந்திர ஊடக இயக்கம் வேண்டிக்கொள்கின்றது.
பொலிஸ் மா அதிபருக்கு,
அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் சட்டத்தின் கீழ் சக்திக சத்குமார எனும் எழுத்தளாலரை சிறைபிடித்து, அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட நிலையில் இறுதி நீதிமன்ற தீர்பானது சுதந்திர ஊடக இயக்கம் என்ற ரீதியில் போற்றபடக்குடியதாக உள்ளதுடன், இத்தீர்ப்பை முன்னுதாரணமாககொண்டு சமூக ஊடக மற்றும் வேறு ஏதேனும் ஊடக முறையில் வெளிக்கொணரும் ஆக்கங்கள் மற்றும் கருத்து தெரிவிக்கும் நபர்களை நியாயமற்ற முறையில் சிறைபிடிப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டி காவல்துறை உத்தியோகத்தர்களை அறிவுறுத்துமாறு சுதந்திர ஊடக இயக்கம் தங்களிடம் தயவுடன் வேண்டிக்கொள்கிறது.
சக்திக சத்குமார பொல்கஹவெல பொலிசாரால் 2019 ஏப்பிரல் 01 திகதி கைது செய்யப்பட்டு,2019 ஒகஸ்ட் 08 பிணையில் விடுவிக்கப்பட்டார்.பொல்கஹவெல காவல்துறையின் விமர்சனமற்ற கவனயீனம் காரணமாக அவருக்கு 130 நாட்கள் சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்ததுடன்,சுமார் பத்து மாதங்கள் வேளையிழக்க நேரிட்டது.சட்ட மா அதிபரால் வழக்கு தொடர்வதற்கான உறிய காரணம் ஏதும் இல்லை என பொல்கஹவெல மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தப்பட்டதை தொடர்ந்து கடந்த 2021 பெப்ரவரி 09 திகதி சக்திக சத்குமாராவை நிரபராதி என தீர்பளித்து வழக்கு முடிவுக்கு வந்தது.முகநூலில் பதிவிட்ட சிறுகதை சம்பந்தமாக காவல் நிலையத்துக்கு கிடைக்கப்பெற்ற புகாரே இவ்வளவு அநீதிகளும் அவருக்கு நிகழ வழிவகுத்தது.
கலை மற்றும் இலக்கிய நூல்கள்,எழுத்தாளர்கள் மற்றும் சுதந்திர ஆர்வலர்கள் சம்பந்தமாக முறைப்பாடுகள் கிடைக்க பெறும் தருனங்களில் முறையான ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் பின்னரே உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை தமது கவனத்துக்கு கொண்டுவருவதுடன் மற்றும் கருத்து சுதந்திரத்தை மீறி அதை சவாலுக்கு உட்படுத்தி சக்திக சத்குமாரவை கைது செய்த சந்தர்பத்திலும் அச்செயற்பாட்டை கண்டித்து சுதந்திர ஊடக இயக்கம் தமது கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது,ஆனாலும் இன்னும் அந்த தர்கரீதியற்ற நடைமுறை தொடர்துகொண்டே செல்கின்றதை பார்க்க கூடியதாக உள்ளது.
சமூக ஊடகங்களில் கவனக்குறைவு காரணமாக பதிவேற்றம் செய்து பின்னர் அத்தவறுக்கு மன்னிப்பு கோறி தவறை சரி செய்பவராயின் அந்நபரை எச்சரித்து அப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என சுதந்திர ஊடக இயக்கம் நம்புவதுடன் அல்லது பொது சட்டத்தின் கீழ் உறிய நடவடிக்கை எடுப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் இருப்பதையும் இவ்விடத்தில் குறிப்பிடுவதுடன்,இத்தகைய சந்தர்பங்களில்,இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் 2019 ஒகஸ்ட் மாதம் பொலிஸ் மா அதிபருக்கு வெளியிடப்பட்ட, 2007 இல 56 அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையில் 3ம் பிரிவுக்குற்பட்ட உள்ளடக்கம் சம்பந்தமான சட்டம் சார்ந்த பகுப்பு ஆய்வு மற்றும் அது போன்ற ஏனைய பரிந்துறைகளையும் நடைமுறை படுத்தக்கோறி காவல் நிலைய அதிகாரிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது காலத்தின் முக்கிய தேவையாக இருக்கின்றது.தற்போது இந்த சட்டத்தின் கீழ் சிறைவாசம் அனுபவிக்கும் நபர்கள் தொடர்பாக மேல் குறிப்பிடப்பட்டுள்ள வழிக்காட்டல் ஊடாக மீள் பகுப்பாயுரை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதுடன் எதிர்காலத்தில் கைது செய்வதற்கு முன்பதாக தர்க்கரீதியாக செயல்படுவதற்க்கு பொலிஸ் மா அதிபர் என்ற வகையில் காவல்துறைக்கு சிறந்த முறையில் வழிகாட்டுமாறும் சுதந்திர ஊடக இயக்கம் தயவுடன் கேட்டுக்கொள்கின்றது.
சீதா ரஞ்சனி
தலைவர்
லசந்த டி சில்வா
செயலாளர்