சூழலியல் பாதிப்பொன்றை அறிக்கையிடச் சென்ற ஊடகவியலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை சுதந்திர ஊடக இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

வென்னப்புவ பிரதேசத்தில் முறையான அனுமதியின்றி வயல் காணியொன்றை நிரப்பியமையை அறிக்கையிடச் சென்ற சந்தர்ப்பத்திலேயே இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதாக சுதந்திர ஊடக இயக்கத்திற்கு அறியக் கிடைக்கின்றது. வயல் காணி தனக்குச் சொந்தமானது என்று உரிமை கோரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஒருவரிடம் குறித்த காணியை நிரப்புவதற்கு பொறுப்பேற்ற மற்றுமொரு முன்னாள் வடமேற்கு மாகாண சபை உறுப்பினரொருவரின் மகன் உட்பட குழுவினரால் தான் தாக்கப்பட்டதாக பிரசாத் புர்னிமால் ஜயமான்ன தெரிவித்தார். இதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் முந்தலம் பொலிஸ் பிரிவிலும் பிரசாத் புர்னிமல் ஜயமான்ன இதுபோன்ற தாக்குதலுக்கு இலக்கானதோடு> அங்கு முந்தலம் பொலிஸாருக்கு கிராம மக்கள் மேற்கொண்ட முறைப்பாட்டை> தாக்கப்பட்ட ஊடகவியலாளரை அழைத்து அல்லது தொடர்புகொண்டு விடயங்களைக் கேட்காமலேயே பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

பொதுமக்களுக்கு உண்மைகளை அறிக்கையிடும் பொறுப்பில் உள்ள ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதை எந்தவிதத்திலும் அனுமதிக்க முடியாது. தமது பொலிஸ் பிரிவில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகள் குறித்து அதிகாரிகள் அமைதியைக் கடைபிடிப்பது ஒரு சிக்கலான போக்காகும்.

ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக தமது பணிகளை முன்னொடுத்துச் செல்லும் நிலைமை தொடர்வதை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என வலியுறுத்தும் சுதந்திர ஊடக இயக்கம்> இந்த சம்பவம் தொடர்பில் உடன் விசாரணை நடத்தி> சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு குறித்த பொலிஸ் அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்கின்றது.