சுயாதீன ஊடகவியலாளரும் புகைப்படக் கலைஞருமான மலிக அபேகோன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டமையானது காவல்துறையினரின்  மனித நேயமற்ற ,வெறுக்கத்தக்க செயல் என்பதுடன்  குறித்த செயலை  சுதந்திர  ஊடக இயக்கம் கடுமையாக கண்டிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும் .

ஏப்ரல் 07 அன்று கொழும்பில்,ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு போராட்டத்தின்போது  மலிக அபேகோன் மருதானை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதுடன் காவல் நிலையத்தில் வைத்து பல சந்தர்ப்பங்களில் கொடூரமான முறையில்  தாக்கப்பட்டுள்ளமை   குறிப்பிடத்தக்கதாகும்.

மலிக அபேகோன் ஊடகவியலாளர் தாக்கப்படவில்லை என்ற மருத்துவ  அறிக்கையுடன்  ஏப்ரல் 08 ம் திகதி  மாலிகாகண்த மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வேலையில் பாதிக்கப்பட்டவர் தரப்பு சார்பாக எழுந்த எதிர்ப்பின்  காரணமாக சிறைச்சாலை மருத்துவ அதிகாரி மூலம் மீண்டும் மருத்துவ அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும், மலிக அபேகோன்னை இம்மாதம்  12 ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இச் சம்பவம் குறித்து முறையான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணையை நடத்தி, பொறுப்புக்குறிய அதிகாரிகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வலியுறுத்தியும், மலிக அபேகோன்னை உடனடியாக விடுதலை செய்யுமாறும் பொலிஸ்மா அதிபரிடம் சுதந்திர ஊடக இயக்கம்  கேட்டுகொள்கின்றது.